முதலாம் ராஜேந்திர சோழனின் வரலாற்றை வட இந்திய மக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் அவர் குறித்த வரலாற்று தொகுப்பு இந்தி வானொலிகளில் ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாஜக முன்னாள் எம்.பி தருண் விஜய் கூறியுள்ளார்.
இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:
‘‘இந்தியாவில் வலிமையாகவும், சிறப்புடனும் ஆட்சி செய்த மன்னர்களில் முதலாம் ராஜேந்திர சோழனுக்கு தனி இடம் உண்டு. அவரது ஆட்சிக்காலம் பொற்காலம்.
இந்தியாவில் இருந்து தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு படையெடுத்துச் சென்று பாரதத்தின் புகழை நிலை நாட்டியவர். அவரது ஆட்சிக்காலத்தில் தான் மிகப்பெரிய ஏரிகள் அமைக்கப்பட்டன.
16 மைல் நீளமும், 3 மைல் அகலமும் கொண்டதாக அவர் அமைத்த ஏரி தான், இந்தியாவிலேயே மனிதர்களால் உருவாகக்கப்பட்ட மிகப்பெரிய ஏரியாக திகழ்கிறது.
அவரது வரலாற்றை தமிழக மக்கள் மட்டுமின்றி நாட்டின் பிற பகுதியில் வாழும் மக்களும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அவரது வரலாற்றை வட இந்திய மாணவ, மாணவியர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் பாடப் புத்தகங்களில் இடம் பெறச் செய்ய வேண்டும்.
இதற்காக, இன்று (செப்டம்பர் 14-ம் தேதி) இரவு 9.30 மணிக்கு அரசு வானொலியிலும், சில தனியார் வானொலிகளிலும், ராஜேந்திர சோழனின் வரலாறு ஒலிபரப்பப்படுகிறது.
ராஜேந்திர சோழனின் வரலாற்றை அவரது வரலாற்றை இந்தியா முழுவதும் பள்ளி பாடப்புத்தகங்களில் இடம்பெறச் செய்ய வேண்டும்’’ எனக் கூறினார்.