முக்கிய செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுடன் சந்திப்பு..

அரசியலில் மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும், நாம் அமைதியாக இருப்போம் என்ற நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில், நடிகர் ரஜினிகாந்த் தனது நெல்லை மன்ற நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார்.

அப்போது பேசிய அவர், அரசியலில் மற்றவர்கள் எல்லோரும் அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்று நிறைய பேர் சத்தம் போட்டு வருகிறார்கள். மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும். நாம் அமைதியாக இருப்போம் என்று தெரிவித்தார்.
மேலும், அரசியலில் கட்டமைப்பு தான் முக்கியம் என்றும், ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாக கையாள வேண்டும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய ரஜினி, தனது ரசிகர்களுக்கு யாரும் அரசியல் கற்றுத்தர வேண்டாம் என்றும் தனது அரசியல் குடும்பத்தைப் பொறுத்தவரை ஒரு தலைவனாக நான் சரியாக இருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.