முக்கிய செய்திகள்

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் 29வது நினைவு தினம் : ராகுல் ,மோடி, டிவிட்டரில் மரியாதை

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு டுவிட்டர் மூலம் காங்கிரஸ் தலைவரும் ராஜீவ் மகனுமான ராகுல் காந்தி, மற்றும் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினர்.

ராகுல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
“ஒரு உண்மையான தேசபக்தர், முற்போக்குவாதி மற்றும் மனிதநேயம் கொண்ட தந்தையின் மகன் என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

பிரதமராக ராஜிவ், நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றார். அவரது முன்னோக்கிய சிந்தனையால் அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தார்.

இன்று அவரது நினைவு நாளில் அன்புடனும், நன்றியுடனும் அவரை வணங்குகிறேன்” என கூறியுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

“ராஜிவ்-ன் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி” என குறிப்பிட்டுள்ளார்.