ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுவிப்பது குறித்து 3 மாதத்தில் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்கக் கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்.
குற்றம்சாட்டப்பட்ட 7 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது.