கட்சிக்குள்ளும், ஆட்சிக்குள்ளும் தனக்கு எதிராக ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை பாஜக மேலிடத்திடம் சொல்லி அழுவதற்காகவே ஓபிஎஸ் டெல்லி சென்றிருக்கிறார் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்
சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ்ப்பேரவையில் நடைபெற்ற, முன்னாள் எம்பி மருத்துவர். செந்தில் எழுதிய “விழித்தால் விடியும்” நூல் வெளியீட்டு விழாவில் ராமதாஸ் பங்கேற்றார். நூலை வெளியிட்டு அவர் பேசியதாவது:
சுதந்திரம் பெற்றுவிட்டோம் ஆனால் பொதுக்கூட்டம் நடத்துவதிலிருந்து மக்களை சந்திக்கும் வரை அனைத்திற்கும் அனுமதி பெற வேண்டியுள்ளது. பசுவை பத்திரமாக கொண்டு சேர்க்கும் நாட்டில் தான் மனிதன் துடிதுடித்து இறப்பதையும் நாம் பார்க்கிறோம். கோடம்பாக்கத்தில் இருந்து வரும் தலைவர்கள் நல்லாட்சி தருவார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை. ஊழலை விமர்சனம் செய்யாததாலேயே எல்லோரும் ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறார்கள். தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் அவ்வளவு அற்புதங்களைச் செய்கிறார். தமிழகத்தில் ஏன் செய்ய முடியாது?
இவ்வாறு பேசிய ராமதாஸ் பின்னர் செய்தியாளர்களையும் சந்தித்தார். அப்போது கூறியதாவது:
தனது குறைகளைச் சொல்லி அழுவதற்காகவே ஓ.பி.எஸ் டெல்லிக்கு சென்றுள்ளார். ஊழல் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று ஸ்டாலின் மனு கொடுத்தது சரியான செயல்தான். ஆனால், அதை ஆளுநரிடம் கொடுத்து பிரயோஜனமில்லை என்றார்.
Ramadass slams OPS