முக்கிய செய்திகள்

கதுவா சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் தேச அவமானம்: ராம்நாத் கோவிந்த்..


கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொல்லப்பட்ட சம்பவம் தேசத்திற்கே அவமானம் என குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன நிலையிலும் குழந்தைகள், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது வெட்கக்கேடு என அவர் கூறியுள்ளார்.