முக்கிய செய்திகள்

உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக பதவியேற்றார் ரஞ்சன் கோகய்

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவியேற்றார். அவருக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ரஞ்சன் கோகய் உச்சநீதிமன்றத்தின் 46 ஆவது தலைமை நீதிபதியாவார்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா, கடந்த 1ஆம் தேதி ஓய்வுபெற்ற நிலையில், புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில், புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு விழா நடைபெற்றது. புதிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

உச்சநீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள ரஞ்சன் கோகாய், அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், வடகிழக்கு மாநிலத்தில் இருந்து நியமிக்கப்படும் முதல் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. தலைமை நீதிபதி பொறுப்பேற்று இருக்கும் ரஞ்சன் கோகாய், 14 மாதங்கள் பதவியில் நீடித்து, அடுத்த ஆண்டு நவம்பரில் ஓய்வுபெற உள்ளார்.

Ranjan Gogoi sworn in as CJ of India