கொரோனா பரிசோதனைக் கருவிகள் என்ன விலைக்கு வாங்கப்பட்டன? : மு.க.ஸ்டாலின் கேள்வி….

பரிசோதனைக் கருவிகள் எத்தனை, என்ன விலை, எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டன என்பதை சத்தீஸ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்தது போல் தமிழக அரசும் அறிவிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்!!

தமிழகம் முழுவதும் தீவிரமாக பரவிவரும் நிலையில், கொரோனா பரிசோதனை பணிகளை மேற்கொள்ள ரேபிட் கிட் கருவிகள் வந்தடைந்துள்ளது.

சுமார் 1.25 லட்சம் ரேபிட் கருவிகள் தமிழக அரசு கோரியிருந்த நிலையில், இதன் முதற்கட்டமாக 14 ஆயிரம் கருவிகள் கிடைத்துள்ளன. அவற்றை கொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா சோதனை தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே தமிழக அரசின் கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளில் குறை இருப்பதாக கூறி வந்த எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

அதில், தமிழகத்திற்கு கொரோனா தொற்றுநோய் பரிசோதனைக் கருவிகளை என்ன விலைக்கு வாங்கப்பட்டுள்ளது என்பதை தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சீனாவிலிருந்து நேற்று இந்தியாவுக்கு வந்த ரேபிட் கிட்கள் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. சீனாவில் தமிழகம் ஆர்டர் கொடுத்த 4 லட்சம் ரேபிட் கிட்களில் 24 ஆயிரம் ரேபிட் கிட்டுகள் நேற்று சென்னையை வந்தடைந்தது.

இது தவிர மத்திய அரசின் தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு 12 ஆயிரம். அதன்படி 12 ஆயிரம் ரேபிட் கிட்டுகள் இன்று சென்னை வந்தன. சீனாவிலிருந்து வந்ததையும் சேர்த்து மொத்தம் 36 ஆயிரம் ரேபிட் கிடடுகள் தமிழகத்தில் உள்ளன.

இந்நிலையில், இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குய்ப்பிட்டுள்ளதாவது… “கொரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனைக் கருவிகள் நமது மாநிலத்துக்கு எத்தனை வாங்கப்பட்டது,

என்ன விலைக்கு வாங்கப்பட்டது, எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டது என்பதை சத்தீஸ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

அதேபோல் தமிழக அரசும் எவ்வளவு கருவிகள், என்ன விலைக்கு வாங்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். நாடே உயிர் காக்கப் போராடிவரும் இந்த நேரத்தில், அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனை வலியுறுத்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.