ஒரே மூச்சில் படித்து விட முடியாத ஜெயபாஸ்கரன் கவிதைகள்: ரவிசுப்ரமணியன்

இன்று கைக்குக் கிடைத்த ந. ஜெயபாஸ்கரனின் ‘பிற்பகல் பொழுதுகளின் உலோக மஞ்சள் தொகுப்பிலிருந்து’ 
ஒரு கவிதை.

“பன்றிக் குட்டிகளுக்கு முலைகொடுத்து வார்த்து
அமைச்சர்கள் ஆக்கிய திருவிளையாடல் தொடர்கிறது
வையையின் அந்தி மஞ்சள் கரையில்.”

மேலடுக்கில் ஒரு அர்த்தத்தை தருவதோடு நில்லாமல் திருவிளையாடல் புராணக்கதையை நோக்கி செலுத்தி வேறு பரிமாணம் கொள்கிறது.

‘ஒரே மூச்சில் முடிந்துவிடும் கவிதை’ என்று தன் கவிதைகள் பற்றி ந. ஜெயபாஸ்கரன் சொன்னாலும் ஒரே மூச்சில் எளிதில் படித்து விட முடியாத கவிதைள்.

முனைந்து தமிழ் ஆங்கில இலக்கிய பனுவல்களின் அர்த்த தளங்களை தொடர்புபடுத்தி அறிகிற போதும் மேலும் சில பரிச்சயங்களோடும் அணுகும் போது கவிதைகள் தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் மற்ற சில திறப்புகள் புலப்படுகின்றன.

பிரம்மனுக்கு அபூர்வமாக கோவில் வாய்த்தது போலதமிழுக்கு வாய்த்த அபூர்வ கவிஞர்.

அவர் எங்கோ ஒரு மூலையில் வந்தது வராமல் தோணும் போது அவருக்காகப் பாடுகிறார். விரும்புபவர்கள் போய் கேட்கலாம். காலச்சுவடு வெளியீடு

  • From Ravisubramniyan’s FB Status about Jayabaskaran’s Poems

சீனாவுக்கும், இந்தியாவுக்கும் ஏன் மானியம் கொடுக்க வேண்டும்: வம்பு பேசும் ட்ரம்ப்!

2011 கிளர்ச்சி–75 பேருக்கு மரண தண்டனை: எகிப்து நீதிமன்றம் அதிரடி

Recent Posts