முக்கிய செய்திகள்

மறுதேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் மாணவர்கள் போராட்டம்


சிபிஎஸ்இ வினாத்தாள் கசிந்ததை கண்டித்து டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 10-ம் வகுப்பு கணிதம், 12-ம் வகுப்பு பொருளாதார பாட வினாத்தாள் கசிவால் மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ தலைமை அலுவலகத்துக்கு வெளியே மாணவர்கள், பெற்றோர்களுடன் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் வினாத்தாள் லீக் ஆனதற்கு நாடு முழுவதும் மறுதேர்வு நடடத்தக்கூடாது என மாணவர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.