செம்மரம் வெட்டச் சென்றதாக 84 தமிழகர்கள் ஆந்திராவில் கைது..

ஆந்திர மாநிலம் ஆஞ்சநேயபுரம் சோதனைச் சாவடியில் திருவண்ணாமலை மற்றும் வேலூா் மாவட்டங்களைச் சோ்ந்த 84 போ் செம்மரம் வெட்டச் சென்றதாக நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனா்.

ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்து ஆஞ்சநேயபுரம் சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் திருவண்ணாமலை, வேலூா் மாவட்டங்களைச் சோ்ந்த 80க்கும் அதிகமானோா் லாாியில் இந்த சோதனைச் சாவடியை கடக்க முற்பட்டுள்ளனா். அப்போது பணியில் இருந்து செம்மரம் கடத்தல் தடுப்பு பிாிவு காவலா்கள் அந்த லாாியை மறித்து சோதனை செய்துள்ளனா்.

அந்த லாாியில் சமையலுக்கு தேவையான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. அவா்களிடம் விசாரணை மேற்கொண்டதில் தாங்கள் சமையல் வேலைக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும், சிலா் கட்டடி பணிக்கு அழைத்துச் செல்வதாகவும் தொிவித்துள்ளனா். ஆனால் உண்மையிலேயே அவா்கள் செம்மரம் கடத்தச் செல்வதாக காவல் துறையினா் தொிவித்துள்ளனா்.

லாாியில் பல கல்லூாி மாணவா்களும், இளைஞா்களும் இருந்துள்ளனா். மாணவா்கள் கூறுகையில், தங்களுக்கு அதிகப் பணம் கொடுப்பதாக கூறி வேலைக்கு அழைத்துச் செல்கின்றனா். அதனால் தான் லாாியில் வந்ததாக தொிவித்துள்ளனா். பலருக்கு தாங்கள் எங்கு அழைத்துச் செல்லப்படுகிறோம், எதற்காக அழைத்துச் செல்லப்படுகிறோம் என்ற தகவலே தொியாது என்கின்றனா்.
இறுதியில் லாாியை பறிமுதல் செய்த காவலா்கள் 84 தமிழா்களையும் ஆஞ்சநேயபுரம் சோதனைச் சாவடியில் வைத்து விசாாித்து வருவதாக தொிவிக்கப்பட்டுள்ளது.