திமுக அரசு எப்போதுமே மதவாத்திற்குத்தானே எதிரானது தவிர,மதத்திற்கு எதிரானது அல்ல என இந்து அறநிலையத்துறை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தமிழ்நாட்டில் உள்ள 1,250 கிராம்புற கோயில்கள்,ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள 1,250 கோயில்கள் என 2,500 கோயில்களுக்கு தலா ரூ.2 லட்சம் என ரூ.50 கோடி வழங்கினார்.
அனைத்து துறைகளும் இணைந்து வளர்வதுதான் வளர்ச்சி அந்த வளர்ச்சி வேண்டும் என்று எண்ணுவதுதான் திராவிட மாடல் ஆட்சி. இன்று சிலர் திராவிடம் என்ற சொல்லைப் பிடிக்காதவர்கள் எங்களை மத்தின் விரோதிகளாக சித்தரிக்கிற முயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாங்கள் மதவாதத்துக்கு எதிகளே தவிர,மதத்துக்கு எதிரிகள் இல்லை. திமுக ஆட்சியில் கொயில்களுக்கு ஏராளமான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
விழாவில் அமைச்சர்கள் பி.கே சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன்,மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, அறநிலையத்துறை செயலாளார் பி.சந்திரமோகன்,ஆணையாளர் ஜெ.குமரகுருபரன்,தவத்திரு குன்றக்குடி குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மருதாசல அடிகளார்,சிவஞான பாலய சுவாமிகள்,சம்பத்குமார் ராமானுஜ ஜீயர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.