சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கந்தசாமியை தாக்கிய காவல்துறையைக் கண்டித்து திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்ட செய்தியைப் போட்டோ எடுத்துவிட்டு திருப்புவனம் காவல்நிலையத்தை போட்டோ எடுத்திருக்கிறார் ஜீனியர்விகடன் போட்டோ கிராபர் சாய்தர்மராஜ்..
அப்போது சாய்தர்மராஜை திருப்புவனம் காவல் ஆய்வாளர் திருவானந்தம் மிரட்டியிருக்கிறார்.பெண் சார்பு ஆய்வாளரை போட்டோ எடுத்தாய் என்று வழக்கு போட்டு சிறையில் தள்ளுவோம் என ஒருமையில் பேசி மிரட்டியிருக்கிறார்.
சுமார் 2-மணி நேரத்திற்கும் மேலாக காவல் நிலையத்தில் அமரவைத்து அராஜகம் செய்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சிவகங்கை ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர்மதி,வழக்கறிஞர் ராஜா ஆகியோர் மற்றும் பத்திரிகையாளர்கள் சென்று காவல் ஆய்வாளர் திருவானந்ததுடன் கடும் சண்டையிட்டு சாய்தர்மராஜை அழைத்துவந்தனர்.
இதனிடையே செயலாளர் கந்தசாமியை தாக்கியதாக உதவி ஆய்வாளர் திருமுருகனையும், பத்திரிக்கை யாளர்களை தரக்குறைவாக பேசியதாக, ஆய்வாளர் திருவானந்தத்தையும் சிவகங்கை ஆயுத படைக்கு பணியிட மாற்றம் செய்து, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் உத்தரவிட்டுள்ளார்.