முக்கிய செய்திகள்

தகவல் அறியும் உரிமை சட்டம், தலைமை நீதிபதிக்கும் பொருந்தும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தகவல் அறியும் உரிமை சட்டம், தலைமை நீதிபதிக்கும் பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

தலைமை நீதிபதிக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொருந்தும் என்ற டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு சரியானதேயாகும்.

டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.