ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு : கொந்தளிக்கும் சீமான்..


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகளால் அதகளப்பட்டுக் கொண்டிருக்கிறது அரசியல் வட்டாரம். நாம் தமிழர் கட்சிக்கு விழுந்த வாக்குகளும், நோட்டாவைவிடவும் பா.ஜ.க பின்னுக்குத் தள்ளப்பட்டதும் அரசியல் விமர்சகர்களால் அலசப்பட்டு வருகிறது. ‘

என்னுடைய உழைப்புக்குக் குறைந்தது பத்தாயிரம் வாக்குகளாவது வந்திருக்க வேண்டும். இவ்வளவு கேவலமாக இந்த நாடு போய்விட்டது என்பதைத்தான் இந்த வெற்றி காட்டுகிறது’ எனக் கொந்தளிக்கிறார் சீமான்.

 

ஆளும்கட்சி வட்டாரத்தை அசைத்துப் பார்த்திருக்கிறது ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள். அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனைவிட 40 ஆயிரத்து 707 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார் டி.டி.வி.தினகரன்.

அதேநேரம், நோட்டா பெற்ற வாக்குகளுக்கும் குறைவாக பா.ஜ.க ஓட்டு வாங்கியதும் நாம் தமிழர் கட்சிக்கு நான்காம் இடம் கிடைத்ததும் அரசியல் பார்வையாளர்களால் உற்று கவனிக்கப்படுகிறது.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயத்துக்காக வெளிநாட்டில் வேலை பார்க்கும் தமிழ் இளைஞர்கள் உள்பட பெரும்படையே களத்தில் இறங்கி தேர்தல் வேலை பார்த்தது. பெரும் கட்சிகளின் வேட்பாளர்கள், பணபலம் என அனைத்தையும் தாண்டி நாம் தமிழர் கட்சி 3 ஆயிரத்து 860 வாக்குகளைப் பெற்றது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பேசினோம். ” என்னுடைய உழைப்புக்குக் குறைந்தது பத்தாயிரம் வாக்குகளாவது வந்திருக்க வேண்டும். இவ்வளவு கேவலமாக இந்த நாடு போய்விட்டது என்பதைத்தான் இந்த வெற்றி காட்டுகிறது.

இந்த நாடு மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. மக்களுக்குக் காசு கொடுத்து வாக்குகளை வாங்கும் நிலை இருக்கும் வரையில் வெற்றி பெறுகிறவர், சேவை செய்யும் மனநிலையில் இருக்க மாட்டார். பணம்தான் பிரதானம் என்றால், நேர்மையான நிர்வாகம், சேவை என்பதையெல்லாம் மக்கள் எதிர்பார்க்கக் கூடாது. ஐம்பது ஆண்டுகளாக மாறி மாறி ஆண்ட இந்தக் கட்சிகள் எல்லாம், ‘காசு கொடுத்தால் போதும்’ என்ற மனநிலைக்கு மக்களைத் தள்ளிவிட்டார்கள்.

இதுதான் இவர்கள் இத்தனை ஆண்டுளாக செய்து வரும் சாதனை. மக்களும் தங்களுடைய உரிமையை விற்கும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள். வாக்கை விற்பது என்பது மானத்தை விற்பது போன்றது என்பதை மறந்துவிட்டார்கள்.

இவ்வளவு பணம் கொடுக்கும் வேட்பாளருக்கு, பணம் எப்படி வந்தது என்பதை யோசிக்கும்போதுதான் நல்ல சிந்தனை பிறக்கும். பணம் பெறுகிறவரையில் மக்களிடமும் நேர்மை இருக்காது. ஆள்பவர்களிடமும் நேர்மை இருக்காது. ‘ நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள், எனக்குப் பணம் கொடு’ என்ற மனநிலையை எப்படிப் பார்ப்பது? இது ஒரு குற்ற சமூகமாகத்தான் மாறிப் போகும்.

கடந்தமுறை தினகரனுக்காக காசு கொடுத்த எடப்பாடிபழனிசாமி இந்தமுறை மதுசூதனனுக்காக வாக்கு கேட்கப் போகும்போது, கடந்தமுறை அவருக்காகப் பணம் கொடுத்தீர்கள் தேர்தலும் நின்று போய்விட்டது; இந்தமுறை தினகரனுக்கே ஓட்டு போடுகிறோம் என்பதைச் சுட்டிக் காட்டிவிட்டனர். இது மக்களிடம் இருக்கும்

ஆர்.கே. நகரில் 50000 இளைஞர் வாக்குகள் இருக்கின்றது. இதை நம்பித்தான் நாங்கள் களத்தில் நின்றோம். தேர்தலில் கடுமையான உழைப்பைக் கொடுத்தோம். தெருத்தெருவாக பல கிமீ தினமும் நடந்து மக்களிடம் பரப்புரை செய்தோம். அதில் 10000 பேர் எங்களுக்கு வாக்கு செலுத்தியிருந்தால்கூட மகிழ்ச்சியடைந்திருப்போம்