முக்கிய செய்திகள்

கேரளாவில் மாத்ருபூமி ஆசிரியர், மனைவி மீது கொடூரத் தாக்குதல்!

கேரளாவில் மாத்துருபூமி நாளிதழின் ஆசிரியர் வினோத சந்திரனையும், அவரது மனைவியையும் ஒரு கும்பல் வீடு புகுந்து கடுமையாக தாக்கிவிட்டு, பணம், நகை, பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

மூத்த ஆசிரியரான வினோத் சந்திரன். இன்று மதியம் சுமார் 1.30 மணியளவில் தாழிச் சொவ்வா பகுதியில் உள்ள சந்திரனின் வீட்டுக் கதவுகள் உடைக்கப்படும் சத்தம் கேட்டுள்ளது. வினோத்தும், அவரது மனைவி சரிதாவும் அறையை விட்டு வெளியில் வந்து பார்த்த போது, 4 பேர் கொண்ட கும்பல் அவர்கள் இருவரின் கண்களையும், வாயையும் கட்டி சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் வினோத்தும், சரிதாவும் பலத்த காயமடைந்துள்ளனர். இது குறித்து பேசிய வினோத் “அவர்கள் எங்கள் இருவரின் கண்களையும், வாயையும் கட்டிவிட்டு எங்களை தாக்கினர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் சென்றவுடன் என்னால் கட்டுகளை அவிழ்க்க முடிந்தது. இல்லையேல் இருவரும் அங்கேயே இறந்திருப்போம்” என்று தெரிவித்தார்.

வினோத்தையும், சரிதாவையும் தாக்கிவிட்டு 1 மணி நேரம் வீட்டில் இருந்த கொள்ளை கும்பல், 35,000 ரூபாய் பணம், 25 சவரன் தங்கம், மடிக்கணினி, செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றன. இந்த கும்பல் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் பேசிக்கொண்டதாக வினோத் தெரிவித்துள்ளார். இதனால் இவர்கள் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Robbers break into Mathrubhumi News Editor’s house, brutally attack him, wife