முக்கிய செய்திகள்

ஐபிஎல் : கொல்கத்தா நைட்ரைடர்ஸை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்

ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வென்றது.

ஐபிஎல் டி20 தொடரின் 35-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. கேப்டன் விராட் கோலி 56 பந்தில் 4 சிச்கர், 9 பவுண்டரியுடன் சதமடித்து 100 ரன்கள் அடித்து அவுட்டானார்.

பெங்களூர் பேட்டிங்கை தொடர்தது 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக 25 பந்தில் 65 ரன் குவித்து அவுட்டாகினார் ஆண்ட்ரு ரஸல். நிதிஷ் ரானா 46 பந்தில் 85 ரன்னுடன் அவுட்டாகமல் இருந்தார்.

இந்த தோல்வியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 9 போட்டிகளில் 4 வெற்றிகள், 5 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.  அதேசமயம் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த பெங்களூர் அணி 9 போட்டிகளில் 2 வெற்றிகள், 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் உள்ளது.