ரூ.2,000 நோட்டுகள் அச்சிடப்படுவது குறைப்பா? ..

புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை RBI குறைந்திருப்பதாக, மத்திய அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின், கடந்தாண்டு மார்ச் மாதம் இறுதிவரையிலான கணக்கின்படி, 664 கோடியே 80 லட்சம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள தகவலில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணியை, இந்திய ரிசர்வ் வங்கி குறைத்திருப்பதாக கூறியிருக்கிறார்.

அண்மைகாலமாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பதுக்கப்படுவதாக எழுந்துள்ள புகாரால், மீண்டும் ஒரு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு வித்திட நேரிடும் என்பதால், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை குறைத்திருப்பதாக அவர் விளக்கமித்திருக்கிறார்.