வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு இடைக்கால நிவாரணமாக 500 கோடி ரூபாயை ஒதுக்கி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
வரலாறு காணாத கனமழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு, டெல்லியிலிருந்து பிரதமர் மோடி நேற்றிரவு திருவனந்தபுரம் சென்றார். அங்கிருந்து கொச்சி சென்ற பிரதமர் மோடி, முதலமைச்சர் பினராய் விஜயன் மற்றும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்புகள் குறித்து மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்திற்கு பின், கேரள வெள்ளப்பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக 500 கோடி ரூபாயை ஒதுக்குவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்த உயர்மட்ட ஆய்வுக்குழு கூட்டத்துக்குபின்னர், ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது , முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடிக்கு எடுத்துரைத்தனர்.
Rs.500 Cr For Kerala Immediate relief