முக்கிய செய்திகள்

வதந்திகளை நம்பி திமுக தொண்டர்கள் யாரும் உயிரை மாய்த்துக்கொள்ளாதீர்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்..


வதந்திகளை நம்பி திமுக தொண்டர்கள் யாரும் உயிரை மாய்த்துக்கொள்ள கூடாது என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது என்றும் மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

திமுக என்ற மாபெரும் இயக்கம் உடன்பிறப்புகள் தாங்கி நிற்கும் கோட்டை என ஸ்டாலின் கூறினார்.