முக்கிய செய்திகள்

இந்திய ரூபாயின் மதிப்பு: தொடரும் சர்ர்…!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்த நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் 22 காசுகள் சரிவடைந்துள்ளது.

மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 332 புள்ளிகளும், தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிப்டி 98 புள்ளிகளும் சரிவடைந்தது. ஹிந்துஸ்தான் யுனிலீவர், பவர்கிரிட், ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி பங்குகள் விலை சரிந்தது. விப்ரோ, டைட்டன், டாக்டர் ரெட்டீ1 நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்தது.

முதல் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி 8 புள்ளி 2 சதவீதம் என்ற அறிவிப்பால் காலையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கிய போதும், வங்கி பங்குகளை முதலீட்டாளர்கள் லாபம் பார்ப்பதற்காக விற்றது  மற்றும் சர்வதேச காரணிகளால் சந்தையில் சரிவு எற்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையே வர்த்தகப் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 22 காசுகள் குறைந்து முதன்முறையாக 71 ரூபாய் 21 காசுகளாக சரிவடைந்தது. கடந்த ஜனவரி மாதம் முதல் ரூபாய் மதிப்பு 10 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

Rupees Down Fall continues