பொருளாதார தடை விதிக்கும் விவகாரத்தில், அமெரிக்கா நெருப்புடன் விளையாட வேண்டாம் என ரஷ்யா கடுமையாக எச்சரித்துள்ளது.
சீனா, ரஷியா ஆகிய நாடுகளின் மீது அமெரிக்க அரசு வியாழக்கிழமையன்று, பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கைக்கு ரஷியா வெளியுறத்துறை இணையமைச்சர் செர்கேய் ரியாப்க்கோவ் ((Sergei Ryabkov)) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நெருப்புடன் விளையாடுவது சிறுபிள்ளைத்தனமானது மட்டுமல்ல, அபாயகரமானது என்பதை அமெரிக்கா புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். ஏற்கனவே தடை விதிக்கப்பட்டவர்கள் மீது மீண்டும் தடை விதிப்பது வேடிக்கையாக உள்ளதாகவும், ரஷ்ய வெளியுறுவுத்துறை இணையமைச்சர் செர்கேய் ரியாப்க்கோவ் கூறியுள்ளார்.
Russia Warns US