பெரியார் தொண்டர் சு. ஒளிச்செங்கோவிற்கு பெரியார் விருது : கி.வீரமணி வழங்கினார்..

சென்னை பெரியார் திடலில் நடந்த புரட்சிக்கவிஞர் விழாவில் பெரியார் தொண்டர் நடராசன் என்கிற சு. ஒளிச்செங்கோ) பெரியார் விருதும், கவிஞர் இளம்பிறைக்கு புரட்சிக்கவிஞர் விருதும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களால் வழங்கப்பட்டது.

திராவிடர் கழகம் நடத்தும் தமிழர் கலை பண்பாட்டுப் புரட்சி விழாவில் திருவாரூர் மாவட்டம் கண்கொடுத்த வனிதம் கிராமத்தைச் சேர்ந்த பெரியார் தொண்டர் நடராசன் என்கிற சு. ஒளிச்செங்கோ அவர்களுக்கு பெரியார் விருதும், கவிஞர் இளம்பிறைக்கு புரட்சிக்கவிஞர் விருதும் அறிவிக்கப்பட்டது..

பெரியாரின் சீடராய் அரை நூற்றாண்டைக் கடந்து புலவர் என்று ஊர்மக்களால் அழைக்கப்படும் நடராசன் என்கிற சு. ஒளிச்செங்கோ, தமிழ் இலக்கியம், அரசியல் துறைகள் மட்டுமின்றி, சர்வதேச இலக்கியங்களிலும் ஆழ்ந்த தோய்வு கொண்டவர்.

ஒளிச்செங்கோ அவர்களுக்கு பெரியார் விருது வழங்கி கெளரவிக்க இருப்பது பாராட்டுக்குரியது. வரும் 29ஆம் தேதி, சென்னை பெரியார் திடலில் நடைபெறும் நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட உள்ளது.

நடராசன் என்கிற சு. ஒளிச்செங்கோ பத்திரிக்கையாளரும், எழுத்தாளருமான சுந்தரபுத்தனின் தந்தையாவார்.…