சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு..

சபரிமலையில் போடப்பட்டுள்ள போலீஸ் தடை உத்தரவு 4-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது.

இதற்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன், போராட்டங்களும் நடந்து வருகிறது.

மண்டல பூஜைக்காக சபரிமலையில் தற்போது நடை திறக்கப்பட்டு உள்ள நிலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவு வருகிற 4-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக சபரிமலை கோவில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்

பிரான்சில் பெட்ரோல் விலை உயர்வால் தொடரும் கலவரம்: அவசர நிலை அமல்..

Recent Posts