சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது. இதற்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் நடந்தன.
பல இடங்களில் வன்முறையாகவும் மாறியது. கேரள அரசியல் சூழலை கடந்த சில மாதங்களாக சபரிமலை விவகாரம் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், கடந்த மாதம் பிந்து மற்றும் கனகதுர்கா என்ற இரு பெண்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர்.
போராட்டம்
இது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் கேரளா வந்த பிரதமர் மோடி, சபரிமலை விவகாரத்தில் கேரள அரசை கடுமையாக சாடினார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 51 பெண்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது. இதற்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் நடந்தன.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்திய மாநில அரசை மோடி விமர்சிப்பது நீதிமன்ற அவமதிப்பு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியது.
இந்நிலையில், சபரிமலை சென்று வந்த கனகதுர்கா என்ற பெண்ணை அவரது மாமியார் தாக்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.