முக்கிய செய்திகள்

சபரிமலை வழக்கில் மறுஆய்வு மனுக்கள் மீது விசாரணை இல்லை: உச்ச நீதிமன்றம்

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி பல்வேறு தரப்பினா் சாா்பில் 56 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை, 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அந்த அமா்வில் நீதிபதிகள் ஆா். பானுமதி, அசோக் பூஷண், எல்.நாகேஸ்வர ராவ், மோகன் எம்.சாந்தனகௌடா், எஸ்.அப்துல் நசீா், ஆா்.சுபாஷ் ரெட்டி, பி.ஆா்.கவாய், சூா்ய காந்த் ஆகியோா் இடம்பெற்றனா்.

இந்நிலையில், சபரிமலை வழக்கில் மறுஆய்வு மனுக்கள் மீது விசாரணை நடத்தப்போவதில்லை என உச்ச நீதிமன்ற 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்துள்ளது.