சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் கேரள மக்களின் அனைத்து விதமானகலாச்சார அம்சங்களையும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசுஅவமதித்துவிட்டது என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார்.
மதுரையில் தோப்பூரில் ஆயிரம் கோடிக்கும் அதிகமானமதிப்பீட்டில் கட்டப்படஉள்ள எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்காக பிரதமர் மோடி இன்று மதுரை வந்திருந்தார்.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரிகளில சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
அதன்பின் தனிவிமானம் மூலம் கொச்சி புறப்பட்ட பிரதமர் மோடி, கொச்சியில் உள்ள பெட்ரோகெமிக்கல் வளாகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்றார்.
பின்னர் அங்கிருந்து திருச்சூரில் நடைபெற்ற பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
பிரதமர் மோடியைக் காண லட்சக்கணக்கிலான பாஜக தொண்டர்கள், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் வந்திருந்தனர்.
கூட்டத்தின் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:
நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சமையல்கியாஸ் இணைப்பு வழங்க வேண்டும் என்கிற எங்களுடைய இலக்கை நாங்கள் நெருங்கிவிட்டோம்.
ஏறக்குறைய 6 கோடி ஏழை பெண்கள் இலவச சமையல் எரிவாயு இணைப்பை பெற்றுள்ளார்கள். இந்தியாவின் எரிபொருள் தேவை வளர்ந்து கொண்டே செல்கிறது.
எண்ணெய் மற்றும் எரிவாயு மே்பாட்டு கட்டமைப்பை நாள் வேகப்படுத்தி இருக்கிறோம்.
சுகாதாரத்தைப் பொருத்தவரை இதற்கு முன்பு இருந்த அரசுகள் அதிகமான அளவு முக்கியத்துவம் அளிக்கவில்லை.
ஆனால், எங்களுடைய சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது. கடந்த 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வரும்போது நாட்டில் கழிவறைகள் என்பது 38 சதவீதம் வீடுகளில் மட்டுமே இருந்தது.
ஆனால், இப்போது, 98 சதவீதம் வீடுகளில் கழிவறை வந்துவிட்டது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம் நாடுமுழுவதும் கவனத்தை ஈர்த்தது.
கேரள மக்களின் கலாச்சாரத்தின் அனைத்து அம்சங்களையும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு, அவமதிப்பு செய்த விதத்தை இந்த தேசத்து மக்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
இப்போது நான் உங்களிடம் கூறுகிறேன் கேரளாவில் ஆண்ட காங்கிரஸ் அரசும், ஆளும் கம்யூனிஸ்ட் அரசும் பெண்களுக்கு அதிகாரமளிப்பதைக் பற்றி கவலை கொள்ளவில்லை.
அவர்கள் அவ்வாறு கவலை கொண்டரிருந்தால், அக்கறை வைத்திருந்தால், முத்தலாக் மசோதாவை மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டு வந்த போது அதை எதிர்க்கமாட்டார்கள்.
இந்தியாவில் ஏராளமான பெண் முதல்வர்கள் இருந்தார்கள். அதில் யாராவது கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் இருந்தாரா
கடந்த 20 ஆண்டுகளாக கடினஉழைப்பாளியாகவும், தேசப்பற்று உள்ளவராகவும் இருந்த இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன்.
ஆனால், அவரை உளவு பார்த்ததாக தவறான குற்றச்சாட்டு கூறி வழக்கு தொடரப்பட்டது.
அரசியல் ஆதாயத்துக்காக சில கேரளாவில் ஆண்ட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் செய்தது.
சிறிது சிந்துத்துப்பாருங்கள், அவர்களின் சொந்த லாபத்துக்காக தேசத்தின் நலனை சிதைத்துவிட்டார்கள்,
அந்த விஞ்ஞானிக்கும் ஏராளமான இடர்பாடுகளை அளித்துவிட்டார்கள்.
இந்த தேசத்தை வலிமையாக உழைத்த ஒவ்வொரு மனிதருக்கும் நாங்கள் மதிப்பளிக்கிறோம்.
அதனால்தான், விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு பத்ம பூஷன் விருது அளித்து கவுரவித்தோம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்