முக்கிய செய்திகள்

சபரிமலை கோவிலில் மேலும் ஒரு பெண் தரிசனம்…

சபரிமலையில் இலங்கை பெண் சாமி தரிசனம் செய்தார் என்பதை போலீசார் வெளியிட்ட வீடியோ மூலம் தெரிவித்துள்ளனர்.

சபரிமலையில் இரு பெண்கள் தரிசனம் செய்த விவகாரத்தால் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில்,

இலங்கை காரத்தீவைச் சேர்ந்த 47 வயதான தமிழ் பெண் சசிகலா சன்னிதானம் சென்று சாமி தரிசனம் செய்தார்.

காலையில் தரிசனம் செய்த சசிகலா, போலீஸ் பாதுகாப்புடன் பம்பை சென்றார்.

அங்கு ஏற்கனவே தயாராக இருந்த மற்றொரு போலீஸ் குழுவுடன் அவர் மின்னல் வேகத்தில் கொச்சி விமான நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு உடனடியாக விமானம் மூலம் இலங்கைக்கு புறப்பட்டார். சசிகலா புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்துக்கு பிறகே அவர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவை போலீசார் வெளியிட்டனர்.