முக்கிய செய்திகள்

சுடுகாட்டில் படுக்க பயமில்லை, சுதந்திர நாட்டில் இருப்பதற்குத்தான் பயமாக இருக்கிறது: சகாயம் ஐஏஎஸ்…


எனக்கு சுடுகாட்டில் படுக்க பயமில்லை ஆனால் இந்த சுதந்திர நாட்டில் இருப்பதற்குத்தான் பயமாக இருக்கிறது என்று சகாயம் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சகாயம் ஐஏஎஸ், ஊழலை எதிர்த்த அன்றே அரசியலுக்கு வந்துவிட்டேன். நான் அரசியலுக்கு வந்துள்ளதை சமூகம் உறுதி செய்யும் என்றார்.

தொர்ந்து, இந்நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது, “கிரானைட் முறைகேடு குறித்த விசாரணையின் போது ஓர் இரவு சுடுகாட்டிலேயே தங்கினீர்களே, அப்போது பயமாக இல்லையா?” என்று கேட்கப்பட்டது.

இக்கேள்விக்கு பதில் கூறிய அவர், “எனக்கு சுடுகாட்டில் படுக்க பயமில்லை ஆனால் இந்த சதந்திர நாட்டில் இருப்பதற்குத்தான் பயமாக இருக்கிறது” என்றார்