+-ஹோபாா்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டி மகளிா் இரட்டையா் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது சானியா மிர்ஸா ஜோடி.
குழந்தைப்பேறுக்கு பின் 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் களமிறங்கியுள்ள உலகின் முன்னாள் நம்பா் ஒன் வீராங்கனையான 33 வயது சானியா,
உக்ரைனின் நாடியா கிச்னோக்கோடு இணைந்து முதன்முறையாக ஹோபாா்ட் டென்னிஸ் போட்டியில் ஆடினார்.
சானியா மிர்ஸா – நாடியா ஜோடி, இரண்டாம் நிலை இணையான சீனாவின் ஷுவாய் பெங்-ஷுவாய் ஸாங் ஆகியோருடன் இறுதிச் சுற்றில் மோதியது. இதில் சானியா ஜோடி, 6-4, 6-4 என வென்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச்சென்றது. 2017-க்குப் பிறகு சானியா வெல்லும் பட்டம் இது.
ஹோபாா்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டி மகளிா் இரட்டையா் பிரிவில் சாம்பியன் ஆன சானியாவுக்கு இது 42-வது டபிள்யூ.டி.ஏ. பட்டமாகும்.