சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்: தலைவர் சரண்யா செந்தில்நாதன் தலைமையில் கூடியது…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் ஒன்றிய அலுவலக கூட்ட அரஙகில் நடைபெற்றது.இதில் தலைவர் சரண்யா செந்தில்நாதன் தலைமை வகித்தார்.துணை தலைவர் கார்த்திக் முன்னிலை வகித்தார்.ஆணையாளர் சாந்தி வரவேற்றார்.அ.தி.மு.க உறுப்பினர் தேவி மீனாள் பேசுகையில்,சங்கராபுரம் ஊராட்சியில் டெங்கு கணக்கெடுப்பு பணிகள் மட்டுமே நடந்து வருகிறது.தடுப்பு பணிகள் உள்ளிட்ட மேல் நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை.எனவே உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.மேலும் சங்கராபுரம் ஊராட்சியில் மின்வாரியத்திற்கு உரிய காப்பீட்டுத் தொகையை செலுத்தி பல ஆண்டுகளாயும் உரிய நடவடிக்கை இல்லை.அது குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.அ.தி.மு.க உறுப்பினர் ராமச்சந்திரன் பேசுகையில்,டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதுடன்,யூனியன் பணிகளுக்கான டெண்டர் தொகையை உடனடியாக அமல்படுத்தி மக்கள் பணிகளை செய்ய வலியுறுத்தினார்.

தலைவர் சரண்யா செந்தில்நாதன் பேசுகையில்,மழைக்காலம் தொடங்கியதால் சுகாதார நடவடிக்கையை மேற்கொள்ள சுகாதார துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புற பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.என்றார்.கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வி,திவ்யா,ஜெயந்தி உள்பட அலுவலர்கள்,பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்

காரைக்குடியில் “வருமானவரி செலுத்துவோர் விழிப்புணர்வுக் கருத்தரங்கம்“…

தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான சட்டத்திருத்த மசோதா :நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் ..

Recent Posts