முக்கிய செய்திகள்

சமயபுரம் மாரியம்மன் கோயில் யானை மிதித்து பாகன் உயிரிழப்பு..


திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் விழாவின் போது மதம் பிடித்த யானை மிதித்து பாகன் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாக கருதப்படுவது சமயபுரம் மாரியம்மன் கோயில். இன்று இந்த கோயில் விழாவின் போது மசினி யானைக்கு மதம் பிடித்துள்ளது. இதையடுத்து, கோயிலுக்கு வந்த பக்தர்களை தும்பிக்கையால் தூக்கி வீசத் தொடங்கியுள்ளது. இதில் பக்தர்களின் குழந்தைகளும் சிக்கியுள்ளனர். அப்போது, யானையை அடக்க முயன்ற யானை பாகனை காலால் மிதித்துள்ளது. இதில், பாகன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இதையடுத்து யானையை அமைதிப்படுத்தும் முயற்சியில் மற்ற யானை பாகன்கள் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் கோயிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.