முக்கிய செய்திகள்

மணல்குவாரிகளை மூடும் உத்தரவு : தமிழக அரசு மேல் முறையீடு…


மணல் குவாரிகளை மூட உயர்நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை 6 மாத காலத்திற்கு மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மனு ஓரிரு நாளில் விசாரணை வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.