மணல் மாஃபியாக்கள் மலேசியாவிற்கு படையெடுப்பு..

தமிழகத்தில் ஆறுகளை சுரண்டிய மணல் மாஃபியாக்கள் தற்போது மலேசியாவிற்கு படையெடுத்துள்ளனர்.
மலேசியாவிலிருந்து மணலை துாத்துகுடி துறைமுகத்திற்கு தனியார் நிறுவனம் இறக்குமதி செய்தது.

தமிழக அரசு அனுமதிக்காத நிலையில் இந்நிறுவனம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையியில் வழக்கு தொடர்ந்தது.வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை மலேசியாவிலிருந்து மணல் இறக்க அனுமதியளித்ததுடன். தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளையும் மூட உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வரவுள்ள நிலையில் மணல் மாஃபியாக்கள் மலேசியாவிற்கு படையெடுத்துள்ளனர்.

மலேசிய மணல் இறக்குமதி செய்வதற்கு பலர் போட்டி போட்டு மலேசியாவில்ஓப்பந்தம் செய்யும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே தமிழகத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய புள்ளிகள் பலர் தனது ஆட்களை மலேசியாவிற்கு அனுப்பி மணல் இறக்குமதி செய்ய ஆயத்தமாகிவிட்டனர்.

குறிப்பாக தற்போதைய தமிழக அமைச்சர் ஒருவரின் மகன்,மற்றும் சேகர் ரெட்டி குருப் , தமிழக மணல் ஒப்பந்ததார்கள் இருக்கின்றனராம்.ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர் இதுகுறித்து வியந்து சொன்னராம்.