முக்கிய செய்திகள்

சானிடரி நாப்கின்களுக்கு ஜி.எஸ்.டி-யில் வரிவிலக்கு..


டெல்லியில் நடைபெற்ற அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கலந்து கொண்ட ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தல் இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது: பிரிட்ஜ் ,வாஷிங்மிஷின்களுக்கான ஜி.எஸ்.டி வரி விகிதம் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

மேலும் ஜி.எஸ்.டி.,யில் இருந்து சானிடரி நாப்கின்களுக்கு முற்றிலும் வரியை விலக்குவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.1000 வரை மதிப்புள்ள ஷூக்களுக்கு 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

முன்னர் ரூ.500 வரை மதிப்புள்ள ஷூக்களுக்கு 5 சதவீதம் இருந்தது.

தொடர்ந்து அடுத்த ஜி.எஸ்.டியின் கூட்டம் வரும் ஆக., மாதம் 4-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.