சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட் சங்கராபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர்தலைவர் தேவி மாங்குடி தலைமையில் ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.
2019-ஆம் நடைபெற்ற ஊராட்சித் தலைவர் தேர்தலில் முதலில் மாங்குடி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு பின்னர் பிரியதர்ஷினி தேர்வானதாக தேர்தல் அலுவர் தெரிவித்ததை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் தீர்ப்பு தேவிமாங்குடிக்கு ஆதரவாக அமைந்ததையடுத்து. சங்கராபுரம் ஊராட்சி தலைவராக தேவி மாங்குமி பதவியேற்றுக் கொண்டார்.
இதனைடுத்து இன்று சங்கராபுரம் ஊராட்சி மன்ற கூட்டம் தேவி மாங்குடி தலைமையில் தொடங்கியது. கூட்டத்தில் ஊராட்சி துணைத் தலைவர் பாண்டியராஜன் எங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாமல் ஊராட்சி தலைவர் பதவியேற்றுள்ளார். வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
ஊராட்சியில் தனது உறவினருக்கு ஆதரவாக சாலை போடப்பட்டுள்ளது என குற்றம் சாட்டினார். இதனை எதிர்த்து வார்டு உறுப்பினர் கணபதி சாலை உறவினருக்கு ஆதரவாக போடப்படவில்லை சங்கராபுரம் ஊராட்சி நலன் கருதியே போடப்பட்டது என்றார்.
இது குறித்து வெளியே செய்தியார்களிடம் பேசிய வார்டு உறுப்பினர் கணபதி கடந்த 3 ஆண்டுகளாக சங்கராபுரம் ஊராட்சி சிறப்பான சேவையை மக்களுக்கு வழங்கவில்லை, நாங்கள் ஒவ்வொரு முறையும் கோரிக்கை வைத்தும் ஏதும் நடக்கவில்லை தற்போது நல்ல தலைவர் கிடைத்துள்ளார் மீதியிருக்கும் நாட்களில் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்த காரசார விவாதத்தை தொடர்ந்து துணைத் தலைவர் பாண்டியராஜன் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். அவர்கள் செய்தியார்களிடம் பேசும் போது மாவட்ட ஆட்சித் தலைவரை சந்திக்கப் போவதாக தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேவி மாங்குடி அனைத்து உறுப்பினர்களும் மனக் கசப்புகளை மறந்து ஒருங்கிணைந்து சங்கராபுரம் ஊராட்சி சிறப்பாக செயல்படவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
வாக்களித்த சங்கராபுரம் மக்கள் தான் பாவம் உறுப்பினர்கள் தங்களின் வேற்றுமைகளை மறந்து சங்கராபுரம் ஊராட்சி மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் நிறைவேறுமா..
செய்தி & படங்கள்
சிங்தேவ்