சங்கராபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் வட்டாசியர் முன்னிலையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை யூனியனைச் சேர்ந்த சங்கராபுரம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி மன்றத்திற்கு 2019-ஆம் நடைபெற்ற தேர்தல் முடிவு குளறுபடிகளால் வழக்கு பதிவானது.
இதனைத் தொடர்ந்து துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு .ஆர். பாண்டியராஜன் தலைவர் (பொறுப்பு) வகித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் மீது ஊராட்சி மன்ற உறுப்பினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளார்.
இது குறித்து பாண்டியராஜனிடம் காரைக்குடி வட்டாச்சியர் மாணிக்கவாசகம் விளக்கம் கேட்டார்.
இன்று (20-01-2022 ) காலை 11 மணியளவில் நம்பிக்கிகையில்லா தீர்மானம் குறித்து விவாதிக்க வட்டாச்சியர் மாணிக்கவாசகம் தலைமையில் சங்கராபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் துணைத் தலைவர் பாண்டியராஜன் உள்ளிட்ட 15 ஊராட்சி வார்டு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
சங்கராபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் வட்டாசியர் முன்னிலையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது.
வட்டாசியர் மாணிக்கவாசகம் தலைமையில் 15 ஊராட்சி உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடத்தினார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 9 பேர் வாக்களித்தனர். எதிராக 6 பேர் வாக்களித்தனர்.
பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி மூன்றில் இரண்டு பங்கு எதிர்ப்பு இருந்தால் மட்டுமே நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றமுடியும்.இதற்கு 12 உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும். போதிய ஆதரவு இல்லாததால் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து வட்டாசியர் மாணிக்கவாசகம் மாவட்ட ஆட்சியர் பார்வைக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.
செய்தி& படங்கள்
சிங்தேவ்