முக்கிய செய்திகள்

சரவண ராஜேந்திரனின் “மெஹந்தி சர்க்கஸ்” ..

சரவண ராஜேந்திரனின் மெஹந்தி சர்க்கஸ் ..

காதல் கீதம்

என் கல்லூரி நாட்களின் நண்பரும், சென்னை வாழ்வின் ஆரம்ப ஆண்டுகளில் அறைத் தோழராகவும் இருந்த சரவண ராஜேந்திரன், இன்று மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார். மகிழ்ச்சியான தருணம்.

இருபது ஆண்டுகளுக்கும் மேலான காத்திருப்பின் கனவைத் தொட்டிருக்கிறார். கவிதைகள் எழுதுவதில் பேசுவதில் தனித்திறன் படைத்த சரவணன், தன் படத்தின் முதல் பாடலை வெளியிட்டிருக்கிறார்.

வெள்ளாட்டு கண்ணழகி
வெண்ணகட்டி பல்லழகி

எனத் தொடங்கும் யுகபாரதியின் கவித்துவமான எளிய பாடல் வரிகள் காதலின் கீதமாக ஒலிக்கிறது.

கண்ண மூடிப் பாத்தா
பாராட்டிடும்
நல்ல காதல் படம்

என்று வித்தியாசமாக காதலியைப் பாராட்டும் வரிகள்.

அதிகாலை நேரத்து அமைதியைப்போல பாடல் மெல்லிசையில் மலர்ந்திருக்கிறது. அதிகம் கேட்டுப்பழகாத குரலில் கேட்கும்போது இனிமை.

வாழ்த்துகளுடன்…
சுந்தரபுத்தன்