ஆப்கான் வீரர்களே உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள்: பாக்., வீரர் சர்ப்ராஸ் பாராட்டு

ஆப்கானிஸ்தான் வீரர்கள் உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் என பாகிஸ்தான் வீரர் சர்ப்ராஸ் அகமது கூறியுள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 பிரிவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

 

முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்தது. ஹகமதுல்லா ஷகிதி சிறப்பாக ஆடி 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான், இமாம் உல் ஹக், பாபர் அசம் மற்றும் சோயப் மாலிக்கின் பொறுப்பான ஆட்டத்தால் 7 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் சுழல்பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். 

 

இந்த வெற்றி குறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறுகையில், ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் நாங்கள் அதிர்ச்சி அடைந்து விட்டோம்.

 

இமாம் உல் ஹக், பாபர் அசம்  மற்றும் சோயப் மாலிக்கின் திறமையான பேட்டிங்கால்தான் எங்களால் 258 ரன்களை எடுத்து வெற்றிபெற முடிந்தது.

 

ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள சுழல் பந்துவீச்சாளர்கள் உலகிலேயே தலைசிறந்து விளங்கி வருகின்றனர். அவர்கள் பந்து வீச்சினால் எங்களை திணறடித்து விட்டனர் என தெரிவித்துள்ளார்.

Sarfrad Ahamed Praise Afghan players

இணையக் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்தும் சீன அரசு: 4,000 இணையதளங்கள் முடக்கம்

ரபேல் விவகாரத்தில் உண்மைதன்மையை மத்திய அரசு நிரூபிக்க வேண்டும் : சத்ருகன் சின்ஹா ..

Recent Posts