முக்கிய செய்திகள்

அக்-2 சர்க்கார் ஆடியோ வெளியீடு: சன் டிவியில் நேரலையாக ஒளிபரப்பாகிறது

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாக இருக்கும் சர்க்கார் படத்தின் ஆடியோ வரும் 2 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியை நேரலையாக ஒளிபரப்ப சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. அக்-2ம் தேதி மாலை 6.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பாக இருக்கிறது. படத்திற்கு இசையமைத்துள்ள ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இந்தப் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். சென்னை புறநகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலெட்சுமி சரத்குமார் முக்கியப்பாத்திரத்தில் நடிக்கிறார். பிரேம்குமார், யோகிபாபு, ராதாரவி உள்ளிட்ட மேலும் பல முக்கிய நடிகர்களும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

Sarkar Audio Release