முக்கிய செய்திகள்

‘சர்க்கார்’ பட விவகார வழக்கில் சமரசம் …

சன் பிக்சர்ஸ் தயாரித்து நடிகர் விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவரவுள்ள சர்க்கார் திரைப்படத்தின் கதை மீது வழக்கு தொடர்ந்தார் வருண் ராஜேந்திரனின் என்பவர்.

வழக்கை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது பட விவகாரத்தில் சமரசம் ஏற்பட்டதாக வருண் ராஜேந்திரன் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

வருண் ராஜேந்திரனின் செங்கோல் கதையை தழுவி சர்க்கார் கதை இருப்பதாக திரைப்பட கதாசிரியர் சங்கத்தில் முறையிட்டார். மனுவை விசாரித்த இயக்குனர் பாக்கியராஜ் கதை இரண்டம் ஒத்த வருவதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் டைட்டிலில் வருண் ராஜேந்திரனுக்கு நன்றி தெரிவிக்கப்படும் என படக் குழு தெரிவித்துள்ளது. படத்தை வெளியிட தடை ஏதும் உயர்நீதிமன்றம் விதிக்கவில்லை