சர்க்கார் விவகாரம் : கமல் டிவிட்…

விஜய் நடித்து வெளிவந்துள்ள சர்க்கார் திரைப்படத்திற்கு தமிழக அமைச்சர்கள்,அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் .

இந்த எதிர்ப்புக்கு மக்கள் மய்யக் கட்சித் தலைவர் கமல் தனது டிவிட் பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு,சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல.

விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும்.அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும்.நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்.”