
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து பரமக்குடி செல்லும் சாலையில் கல்லல்- காளையார்கோயில்இடையே அரண்மனை சிறுவயல் அருகே ஓடும் சருகணி ஆற்றின் தரைப்பாலம் மீது வெள்ளம் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலத்திற்கு அருகே புதிய மேம்பாலப்பணி தற்போது நடைபெற்று வருகிறது.
காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
2005- ஆம் ஆண்டுக்குப்பிறகு தற்போதுதான் ஆற்றில் வெள்ளம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.