சசிகலா என்னை முதல்வராக்கவில்லை : மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி


சிவகங்கையில் நடைபெற்ற எம்ஜிஆர் நுாற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு மதுரை விமான நிலையம் வந்த முதல்வர் எடப்பாடி மழனிச்சாமி செய்தியார்களைச் சந்தித்து அவர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது அவர் சசிகலா ஒன்றும் என்னை முதல்வராக்கவில்லை என்றும் ஒட்டுமொத்த எம்எல்ஏக்களும் சேர்ந்து என்னை முதல்வராக தேர்ந்தெடுத்தனர் என் தெரிவித்தார். ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். வருமான வரித் துறை சோதனைக்கும் மாநில அரசுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இந்த சோதனை எதனால் நடைபெற்றது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஜெயலலிதா அறையில் எந்த சோதனையும் நடத்தப்படவில்லை. வரி ஏய்ப்பு புகாரின் பேரில் சசிகலா குடும்பத்தினரிடம் சோதனை நடைபெற்றது
சசிகலாதான் என்னை முதல்வராக்கினார் என்று தினகரன் கூறிவருகிறார். அதுபொய். என்னை முதல்வராக்கியது ஒட்டுமொத்த எம்எல்ஏக்களும்தான். அதிமுகவுக்கு முதல்வர் யார் என்று தேர்வு செய்யும் இடத்தில் அவர் இருந்திருந்தால் இன்று எம்எல்ஏக்கள் அனைவரும் அவருக்கு ஆதரவாகத்தானே இருந்திருப்பர். கட்சிக்கும் ஆட்சிக்கும் விசுவாசமாக இருந்ததால்தான் இப்பதவிக்கு வந்துள்ளேன்.
தினகரன் கடந்த 10 ஆண்டுகளாக கட்சியில் இல்லை. டிடிவி தினகரனுக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இருக்காது. சில பேர் செய்துள்ள தவறுகளால் கட்சிக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்துள்ளேன்.
நான் சேலத்தில் இருந்தபோது டிடிவி தினகரன் தன்னை ஆர்.கே. நகர் வேட்பாளராக அவராகவே அறிவித்துக் கொண்டார். கட்சியில் பிரச்சினை ஏற்படக் கூடாது என்பதற்காக அவரை நாங்கள் ஆதரித்தோம் என்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.


 

நீதிக்கட்சி 101 ஆம் ஆண்டு விழா ( வீடியோ – 18.11.2017)

2017 உலக அழகி மனுஷி சில்லா… பட்டம் வென்ற மகிழ்ச்சித் தருணத்தில்… (வீடியோ)

Recent Posts