முக்கிய செய்திகள்

சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் சோதனை..


சசிகலாவின் அண்ணன் மகனான மறைந்த மகாதேவன் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மன்னார்குடி கந்தர்வகோட்டையில் உள்ள செங்கமலத்தாயார் கல்லூரியில் சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சையில் டாக்டர் வெங்கடேஷ் சசி அண்ணன் சுந்தரவத்தனத்தின் மகன், மற்றும் திவாகரன் நண்பர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
வருமான வரித்துறை சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்தமான இடங்களில், நிறுவனங்களில் சோதனை நடத்தி வருகிறது. கிட்டத்தட்ட 160 இடங்களுக்கும் மேல் சோதனை நடந்து வருவதாக தகவல் கூறப்படுகிறது. இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுக்கச் செல்லும் கொடநாடு எஸ்டேட்டிலும் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.