சசிகலாவின் வாக்குமூலம் என்று வெளியான தகவல் பொய்யானது : ஆணையம் தகவல்


ஜெயலலிதாவின் மரணம் தொடா்பாக சசிகலா தாக்கல் செய்த பிரமாண பத்திரம் என்ற பெயரில் வெளியான தகவல்களில் பெரும்பான்மையானவை பொய்யானது என்று விசாரணை அதிகாாி ஆறுமுகசாமி விளக்கம் அளித்துள்ளாா்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. ஆணையத்தில் 55 பக்கங்கள் கொண்ட பிரமாணப் பத்திரத்தை சசிகலா தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் அவா் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இடம் பெற்றுள்ள தகவல்கள் என்ற பெயாில் சில தகவல்கள் வெளியாகின.

அந்த செய்தியில், ஜெயலலிதாவுக்கு 20 மருத்துவா்கள் சிகிச்சை அளித்தனா் உள்ளிட்ட பல தகவல்கள் இடம் பெற்றிருந்தன. இது தொடா்பாக விசாரணை அதிகாாி ஆறுமுகசாமி மறுப்பு தொிவித்துள்ளாா்.

மேலும், வாக்குமூலம் என்ற பெயாில் வெளியான தகவல்களில், ஜெயலலிதாவை ஓ.பன்னீா் செல்வம், விஜய பாஸ்கா், நிலோபா் கபில் உள்ளிட்டோா் பாா்த்தனா் போன்ற தகவல்கள் இடம் பெற்றிருந்தன. இவை பொய்யானவை. இது போன்று பல தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இவை சசிகலாவின் ஆதரவாளா்களால் பரப்பப்பட்டவை என்று தொிவித்துள்ளாா்.