மாயமான செய்தியாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்: சவுதி அரசு தகவல்..

மாயமான செய்தியாளர் விவகாரத்தில் ஜமால் கசோக்கி துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை சவுதி அரசு உறுதி செய்துள்ளது.

இது குறித்து சவுதி அரேபிய ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஜமால் கசோக்கி சவுதி அரேபிய தூதரகத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலையில் சவுதி சேர்ந்த 18 பேர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபிய அரசர் சல்மானின் நெருங்கிய உதவியாளர், சவுதி புலனாய்வு தலைமை அதிகாரிகள் நீக்கப்ப்டுள்ளதாகவும் மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் தெரிவித்துள்ளது.

முன்னதாக அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழின் சவுதி அரேபிய செய்தியாளராக பணியாற்றிய ஜமால் கசோக்கி,

கடந்த 2-ஆம் தேதி அன்று துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்கு சென்றார்.

ஆனால் அதன் பின்னர் அவர் மாயமான நிலையில், கசோக்கியை தூதரகத்தில் வைத்து 15 பேர் கொண்ட கும்பல் சித்ரவதை செய்து கொன்று விட்டதாக துருக்கி ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து ஏற்கனவே ஒரு முறை தூதரகத்தில் விசாரணை நடத்திய துருக்கி போலீசார், வியாழன் அன்று மீண்டும் சோதனை நடத்தி உள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து சவுதி மற்றும் துருக்கி அரசுகளுடன் ஆலோசனை நடத்திய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவின் அறிக்கைக்கு பின்னர் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமிர்தசரஸ்: ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62ஆக உயர்வு..

மலேசிய முன்னாள் துணைப்பிரதமர் மீது 45 ஊழல் குற்றச்சாட்டு..

Recent Posts