சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை..

சவுதி பட்டத்து இளவரசர் வரும் 19-ஆம் தேதி இந்தியா வருவது உறுதியாகியுள்ளது.

நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றபின் கடந்த 2016-ஆம் ஆண்டு அரசு முறைப் பயணமாக ரியாத் சென்றார்.

இந்த பயணத்துக்குப் பின் 2017-18-ல் இந்தியா-சவூதி நாடுகளிடையேயான இருதரப்பு வர்த்தகம் சுமார் 1 லட்சத்து 95 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்தது.

இதனை தொடர்ந்து இந்தியாவுக்கு எரிசக்தி வழங்கும் நாடுகளில் முக்கியப் பங்காற்றும் சவூதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வரும் 19-ஆம் தேதி இந்தியா வரவுள்ளார்.

டெல்லியில் புதிய தூதரகத்தைத் திறந்து வைக்கும் அவர், தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், சுற்றுலா என பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.