முக்கிய செய்திகள்

சவுதி அரேபியாவில் பெண்கள் ஆயுதப் படையில் சேர அரசு அனுமதி.. ..

சவுதி அரேபியாவில் பெண்கள் ஆயுதப் படையில் சேர அந்நாடு அனுமதி அளித்துள்ளது.

முஸ்லிம் நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன.

முகம், உடல் தெரியாத அளவுக்கு ஆடைகள் அணிதல், கார் ஓட்டத் தடை, விளையாட்டுப் போட்டிகளை நேரடியாகப் பார்க்கத் தடை, சினிமா பார்க்கத் தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் பெண்களுக்கு இருந்தன.

இந்த நிலையில் சவுதி அரேபியின் இளவரசர் வந்த முகம்மது பின் சல்மான் பல்வேறு புதிய சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு வருகின்றன.

பெண்கள் கார் ஓட்டுவதற்கும், ஓட்டுநர் உரிமம் பெற்றுக்கொள்ளவும் பெண்கள் திரையரங்குகளில் சென்று சினிமா பார்க்கவும் சவுதி அனுமதி அளித்தது.

சவுதியின் 87-வது தேசிய தினத்தையொட்டி கடந்த ஆண்டு பெண்கள் முதல்முதலாக மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் பெண்கள் பாதுகாப்புப் படையில் சேர சவுதி அனுமதி அளித்தது.

பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளைத் தளர்த்திச் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துக்கு ஆத்திரத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.

முஸ்லிம் நாடுகள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய நிலையில், பெண்களுக்கு அதிகமான சுதந்திரம் அளிப்பதை அல்கொய்தா தீவிரவாத அமைப்பு கண்டித்தது.

இந்த நிலையில் பெண்கள் ஆயுதப் படையில் சேர சவுதி அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து சவுதி வெளியுறவுத் துறை அமைச்சர் ட்விட்டர் பக்கத்தில்,

”பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான மற்றொரு படி இதன் மூலம் பெண்கள் சார்ஜெண்டாக பணியாற்ற முடியும்” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து சவுதியில் பெண்கள் முன்னேற்றத்துக்காக சீர்திருத்தங்கள் நடந்து வருவதை அந்நாட்டில் உள்ள பெண் சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.