சவுதி இளவரசர் தலால் பின் அப்துல் அஜிஸ் காலமானார்

சவுதி அரேபியாவின் இளவரசர் தலால் பின் அப்துல் அஜிஸ் காலமானார். அவருக்கு வயது 87.

கடந்த 1960ம் ஆண்டு பல்வேறு பொறுப்புகளில் இருந்த அவர், அந்த ஆண்டே அரியணைக்கு வந்தார்.

சவுதியில் பெண்களுக்கு வாக்களித்தல், கார் ஓட்டுவதற்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர் அப்துல் அஜிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் பொறுப்புகள் அனைத்தும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்குச் சென்றது.

இந்நிலையில் நேற்று மாலை அப்துல் அஜிஸ் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு நாட்டுத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.